சுற்றுலா

கொடைக்கானல் சுற்றுலா இடங்களுக்கு நாளை விடுமுறை

செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்​கானலில் உள்ள முக்​கிய சுற்​றுலா தலங்​களான குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்​காடு​கள்,பேரிஜம் ஏரி மற்​றும் மன்​னவனூர் சூழல் சுற்​றுலா மையம் ஆகியவை வனத்​துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்​ளன.

இங்கு தின​மும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப் பயணி​கள் பார்​வை​யிட அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர்.

நாளை (ஏப்​.23) சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறு​வதையொட்​டி, வனத்​துறை சுற்​றுலா இடங்​களுக்கு நாளை ஒரு​நாள் மட்​டும் விடு​முறை அளிக்​கப்​படு​கிறது.

ஆகவே, சுற்​றுலா பயணி​கள் செல்ல அனு​மதி இல்​லை. ஏப்​.24-ம் தேதி முதல் வழக்​கம் போல் சுற்​றுலா பயணி​கள் செல்ல அனு​ம​திக்​கப்​படு​வர் என கொடைக்​கானல் வனத்​துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT