சுற்றுலா

ஊட்டியில் இன்று ரோஜா கண்காட்சி தொடக்கம்: இரண்டு லட்சம் மலர்களில் பறவைகள் உருவம் வடிவமைப்பு

செய்திப்பிரிவு

ஊட்டி: ஊட்​டி​யில் ரோஜா கண்​காட்சியை முன்​னிட்டு 2 லட்​சம் ரோஜாக்​களை கொண்டு அன்​னப்​பறவை உள்​ளிட்ட பறவை​கள் வடிவ​மைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

நீல​கிரி மாவட்​டம் ஊட்​டி​யில் உள்ள ரோஜா பூங்​கா​வில், 21-வது ரோஜா மலர் கண்​காட்சி இன்று (மே 14) முதல் 5 நாட்​கள் நடக்​கிறது. இன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்​சி​யர் லட்​சுமி பவ்யா கண்​காட்​சியை தொடங்கி வைக்​கிறார். இதையொட்​டி, பூங்​கா​வில் 4 ஆயிரம் வகை​களில், 32 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பல வண்ண ரோஜா செடிகள் தயார்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

தவிர, ஆண்​டு​தோறும் ரோஜா கண்​காட்​சி​யின்போது, சிறப்பு அம்​ச​மாக ஏதாவது ஒரு பொருளை மையப்​படுத்தி அது குறித்த உருவங்​கள் பூங்கா வளாகத்​துக்​குள் காட்​சிப்படுத்​தப்​படு​வது வழக்​கம். அந்த வகை​யில், இந்த முறை, பறவை​யினங்​கள் காட்சிப்​படுத்​தப்பட உள்​ளன.

ரோஜா பூங்கா உதவி இயக்​குநர் பைசல் கூறும்​போது, ‘‘21-வது ரோஜா கண்​காட்​சி​யில் சுற்​றுலா பயணி​களை மகிழ்விக்க ரோஜா மலர்​கள் பூத்து தயார் நிலை​யில் உள்​ளன. சிறப்பு அம்​ச​மாக கடல் வாழ் உயி​ரினங்​களை பாது​காக்​கும் நோக்​கில், 2 லட்​சம் ரோஜா மலர்​களால் அன்​னப்​பறவை​கள், இரு​வாச்​சி, புல்​புல், தேன்​சிட்​டு, உள்​ளிட்ட பறவை​களின் உரு​வம் உரு​வாக்​கப்​பட்டு வரு​கிறது. இது சுற்​றுலா பயணி​களை வெகு​வாக கவரும்’’ என்​றார்.

SCROLL FOR NEXT