சுற்றுலா

காஷ்மீரில் உலகின் உயரமான சுழலும் உணவகம்!

ஆசியாவின் மிக நீளமான ஸ்கை இழுவை லிப்ட்

செய்திப்பிரிவு

குல்மார்க்: ஜம்மு காஷ்மீரின் பார​முல்லா மாவட்​டத்​தில் மலைப்​பகு​தி​யில் அமைந்​துள்ள குல்​மார்க் முக்​கிய சுற்​றுலாத் தலமாக விளங்​கு​கிறது. குளிர்​கால அதிசய உலக​மாக கருதப்​படும் குல்​மார்க்கில் உலகின் உயர​மான சுழலும் உணவகத்தை முதல்​வர் உமர் அப்​துல்லா நேற்று முன்​தினம் திறந்து வைத்​தார்.

இந்த உணவகம் அபர்​வாட் சிகரத்​தில் சுமார் 14 ஆயிரம் அடி உயரத்​தில் அமைந்​துள்​ளது. அத்​துடன் ஆசி​யா​வின் மிக நீள​மான ஸ்கை இழுவை லிப்​டும் அங்கு தொடங்கி வைக்​கப்​பட்​டது.

இந்த நிகழ்​வு​கள், குளிர்​கால விளை​யாட்டு மற்​றும் சொகுசுப் பயணத்துக்​கான முதன்​மை​யான இடமாக குல்​மார்க்​கின் நற்பெயரை உயர்த்​து​வ​தாக உள்​ளன. இந்த மேம்​பாடு​கள் குல்மார்க்​கின் சுற்​றுலா உள்​கட்​டமைப்பை சர்​வ​தேச தரத்​துக்கு உயர்த்​தும் பரந்த முயற்​சி​யின் ஒரு பகு​தி​யாகும்.

புதி​தாகத் தொடங்​கப்​பட்​டுள்ள இந்​தச் சுழலும் உணவகம் பார்வை​யாளர்​களுக்கு ஒரு தனித்​து​வ​மான அனுபவத்தை வழங்குகிறது. அங்கு பனி மூடிய மலைகளின் பரந்த காட்​சிகளை ரசித்​துக் கொண்டே, மணம் மிக்க காஷ்மீரி கஹ்வா மற்​றும் சுவை​யான உணவு​களை அனுபவிக்​கலாம்.

இந்​தச் சூடான, வசதியான உணவகம் மெது​வாகச் சுழல்​கிறது. உணவு உண்​பவர்​களுக்கு மூச்​சடைக்க வைக்​கும் இமயமலைக் காட்​சிகளைத் தடையின்​றிப் பார்க்க வாய்ப்​பளிக்​கிறது.

குல்​மார்க் நகரம் ஏற்​கெனவே பல உலக சாதனை​களைக் கொண்டுள்​ளது. குறிப்​பாக, உலகின் மிக உயர​மான கோண்​டோலா மற்​றும் ஸ்கை முனை, ஆசி​யா​வின் மிக நீள​மான ரோப்வே மற்​றும் உலகின் மிகப்​பெரிய பனிக்​கூண்டு உணவகம்​ ஆகிய​வற்​றைச்​ சொல்​லலாம்​.

SCROLL FOR NEXT