குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கான மலர் நாற்றுகள் நடவுப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

 
சுற்றுலா

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்காக 4.50 லட்சம் மலர் நாற்றுகள் நடவுப் பணி

செய்திப்பிரிவு

குன்னூர்: நீல​கிரி மாவட்​டம் குன்னூர் சிம்ஸ் பூங்​கா​வில் கோடை சீசனுக்​காக 4 லட்​சத்து 50 ஆயிரம் மலர் நாற்​றுகள் நடவு செய்​யும் பணி தொடங்​கியது.

குன்​னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா நூற்​றாண்டு பழமை வாய்ந்​தது. இங்​குள்ள அரிய வகை மரங்​கள் மற்​றும் மலர்ச் செடிகள் ஆகியவை சுற்​றுலாப் பயணி​களை வெகு​வாக கவர்ந்து வரு​கின்​றன. ஆண்​டு​தோறும் ஏப்​ரல், மே மாதங்​களில் கோடை சீசன் நடை​பெறு​வது வழக்​கம்.

          

மே மாத இறு​தி​யில் பூங்​கா​வில் பழக் கண்​காட்​சி​யும் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த ஆண்டு மே மாதம் இறு​தி​யில் 66-வது பழக் கண்​காட்சி நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில், குன்னூர் சிம்ஸ் பூங்​கா​வில் மலர் நாற்​றுகள் நடவு செய்​யும் பணி நேற்று தொடங்​கியது. சால்​வி​யா, டேலி​யா, பால்​சம், மேரி கோல்​டு, ஆஸ்ட்​டர், பேன்​சி, பிளாக்ஸ் உட்​பட்ட 125-க்​கும் மேற்​பட்ட ரகங்​கள் நடவு செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

அமெரிக்​கா, ஜப்​பான், பிரான்​ஸ், ஜெர்​மனி, நெதர்​லாந்து உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களி​லிருந்​தும் கொண்டு வரப்​பட்ட நாற்​றுக்​கள் நடவு செய்​யப்பட உள்​ளன. பூங்கா முழு​வதும் சுமார் 4 லட்​சத்து 50 ஆயிரம் மலர் நாற்​றுகள் நடவு செய்​யப்பட உள்​ளன.

நடவுப் பணியை தோட்​டக்​கலைத்​துறை இணை இயக்​குநர் சிபிலா மேரி தொடங்கி வைத்​தார். இந்​தப் பூக்​கள் வரும் கோடை சீசனில் பூத்​துக்​குலுங்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. சென்ற ஆண்​டை​விட இந்த ஆண்டு சுற்​றுலாப் பயணி​களின் வருகை அதி​கரிக்​கும் என்று தோட்​டக்​கலைத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT