சுற்றுலா

குன்னூர் மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு: மலை ரயில் சேவை 4-ம் தேதி வரை ரத்து

செய்திப்பிரிவு

குன்னூர்: நீல​கிரி மாவட்​டம் குன்​னூரில் கடந்த ஒரு வாரத்​திற்கு முன்பு பெய்த கனமழையின் காரண​மாக பல்​வேறு இடங்​களில் மண் சரிவு ஏற்​பட்டு சாலை போக்​கு​வரத்து நிறுத்​தப்​பட்​டது. மலைப்​பாதையில் 90% பணிகள் நிறைவு பெற்​றதால், போக்​கு​வரத்​துக்​காக சாலை திறக்க தயார் நிலை​யில் இருந்​தது.

இந்​நிலை​யில், மீண்​டும் நேற்று முன்​தினம் இரவு பெய்த கனமழையின் காரண​மாக கே.எம்.எஸ் பகுதி அருகே மரங்​களு​டன் மண் சரிவு ஏற்​பட்​டது.

மேலும், நந்​தகோபால் பாலம் அரு​கில் ராட்​சத பாறை சாலை​யில் விழுந்​தது. உடனடி​யாக சம்​பவ இடத்​திற்கு விரைந்த தீயணைப்​புத் துறை​யினர் மற்​றும் நெடுஞ்​சாலை துறை​யினர் ஜேசிபி இயந்​திரம் மூலம் மண், பாறைகளை அகற்றி சாலையை சீரமைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

இதற்​கிடையே தண்​ட​வாளத்​தில் ஏற்​பட்ட மண் சரிவால் கடந்த 24ம் தேதி முதல் நேற்று வரை மலை ரயில் சேவை ரத்து செய்​யப்​பட்​டிருந்​தது. ஆனால் சீரமைப்பு பணிகள் இன்​னும் முடிவடை​யாததன் காரண​மாக வரும் 4-ம் தேதி வரை மேட்​டுப்​பாளை​யம்-ஊட்டி இடையே மலை ரயில் சேவை ரத்து செய்​யப்​படுவ​தாக தெற்கு ரயில்வே அறி​வித்துள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT