மாமல்லபுரம் ஐந்து ரதம் சிற்பத் தொகுதி
சென்னை: உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் கலைச் சின்னங்களை வியாழக்கிழமை (நவ.19) சுற்றுலாப் பயணிகள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்.
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ மன்னர்களின் சிற்பக் கலையை பறைசாற்றும் கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், புலிக்குகை மற்றும் வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்டவற்றை, தொல்லியல்துறை பராமரித்து பாதுகாத்து வருகிறது.
இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.40, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தலா ரூ.600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நவம்பர் 19 முதல் 25-ம் தேதி வரையில் உலகப் பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுவதால், பாரம்பரிய வாரத்தின் முதல் நாளான நாளை (நவ.19) கலைச் சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.