கோப்புப் படம்

 
சுற்றுலா

மதுரை: தமிழ்நாடு ஹோட்டலில் ரூ.99-க்கு சிக்கன் பிரியாணி - சனி, ஞாயிறுகளில் வழங்க ஏற்பாடு

செய்திப்பிரிவு

மதுரை: மதுரையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் ரூ.249 மதிப்புள்ள சிக்கன் பிரியாணி ரூ.99-க்கு நாளை (ஜூலை 11) அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அதன் மேலாளர் கலீல் அகமது தெரிவித்தார். இந்த பிரியாணி வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பரிமாறப்படும்.

மதுரையில் அழகர் கோவில் சாலை மற்றும் பெரியார் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு ஹோட்டல்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான இந்த ஹோட்டல்கள், மதுரைக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு தகுந்த வகையில் புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு நாளை முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ரூ.99-க்கு புதிய வகை சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஹோட்டல் மேலாளர் கலீல் அகமது கூறியதாவது: உயர் தரமான சீரக சம்பா அரிசி, தேர்ந்தெடுக்கப்பட்ட மசாலாப் பொருட்கள், புத்துணர்ச்சியூட்டும் மூலிகை கள் மற்றும் தரமான பொருட் களைக் கொண்டு புதிய ‘சிக்னேச்சர் பிரியாணி' தயாரிக்கப்படுகிறது.

எங்களின் புதிய பிரியாணி அனைத்து விதமான சுவை விருப் பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்படுகிறது. வழக்கமாக ரூ.249-க்கு வழங்கப் படும் இந்த சிக்கன் பிரியாணி, உணவு ஆர்வலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.99-க்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 12.30 மணி முதல் 3.30 மணி வரை வழங்கப்படும்.

முன்பதிவுக்கு 9176995841, 6380699288 ஆகிய மொபைல் எண்களிலும், hoteltamilnadumadurai@gmail.com என்ற இமெயில் மூல மாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.

SCROLL FOR NEXT