சுற்றுலா

சுற்றுலா தலங்களில் உள்ள தங்கும் விடுதி உணவகங்களில் ரூ.99-க்கு பிரியாணி வழங்க ஏற்பாடு: அமைச்சர் ராஜேஷ்குமார் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ​முக்​கிய சுற்​றுலா தலங்​கள் மற்​றும் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட தங்​கும் விடுதி உணவகங்​களில் ரூ.99-க்கு பிரியாணி வழங்க வழி​வகை செய்ய வேண்​டும் என அலுவலர்​களுக்கு, சுற்​றுலாத்துறை அமைச்​சர் ராஜேஷ்கு​மார் உத்​தர​விட்​டார்.

தமிழக சுற்​றுலா வளர்ச்​சிக் கழகம் சார்​பில், அனைத்து மாவட்​டங்​களில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் சுற்​றுலா வளர்ச்சி திட்ட பணி​கள் குறித்​து, துறை அமைச்​சர் ராஜேஷ்கு​மார் தலை​மை​யில் ஆய்​வுக்​கூட்​டம், சேப்​பாக்​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இந்த கூட்​டத்​தில், ஓட்​டல் தமிழ்​நாடு, அமுதகம் உணவகம், சுற்​றுலா வளர்ச்​சிக் கழகம் சார்​பில் நடத்​தப்​படும் 15 படகு குழாம்​கள், ஆலயம் தங்​கும் விடு​தி​கள், 15 சொகுசு பேருந்​துகளு​டன் தமிழகம் முழு​வதும் இயக்​கப்​படும் 64 சுற்று பயண தொகுப்​பு​கள், 8 குயிக் பைட்ஸ் விற்​பனை நிலை​யங்​களில் தற்​போது நடை​பெற்று வரும் பணி​கள் குறித்து அலு​வல​ர்​களிடம் அமைச்​சர் கேட்​டறிந்​தார்.

அனைத்து தங்​கும் விடு​தி​களி​லும் ‘டைனமிக் ப்ரைசிங்’ கட்டண முறையை தொடர்ந்து செயல்​படுத்​த​வும், தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ஓட்​டல் தமிழ்​நாடு உண

வகங்​களில் மே மாதம் முதல் நடை​பெற்று வரும் உணவுத் திரு​விழாவை சிறப்​பாக நடத்​த​வும், முக்​கிய சுற்​றுலா தலங்​கள் மற்​றும் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட தங்​கும் விடுதி உணவகங்​களில் பிரி​யாணி ரூ.99-க்​கும், அசைவ விருந்து ரூ.499-க்​கும் விடு​முறை நாட்​களில் வழங்க வழி​வகை செய்​யு​மாறு அலு​வலர்​களுக்கு அமைச்​சர் அறி​வுறுத்​தி​னார்.

இந்த ஆய்வு கூட்​டத்​தில், சுற்​றுலாத் ​துறை செயலர் சி.ஸ்​வர்​ணா, இயக்​குநர் வீ.ப.ஜெயசீலன், இணை இயக்​குநர் அ.சிவப்​ரி​யா, தமிழக சுற்​றுலா வளர்ச்​சிக் கழக பொது​மேலா​ளர் சி.லட்​சுமி பிரியா உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT