சுற்றுலா

உதகை சுற்றுலா | ருசி மிக்க வர்க்கியை எங்கு வாங்கலாம்?

செய்திப்பிரிவு

ஊட்டி வர்க்கி மிகவும் பிரபலமானது, அதே சமயம் ருசியானது. உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி வர்க்கியை வாங்கி ருசிக்கலாம். இந்த வர்க்கி உதகையில் உள்ள அனைத்து பேக்கரி மற்றும் கடைகளில் கிடைக்கும். வால் பேரி, பிளம்ஸ், பீச், ஸ்டராபெரி பழங்கள் இங்கு கிடைக்கும்.

இவை அனைத்தும் நீலகிரி மற்றும் கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் மட்டும் விளையக்கூடியவை. இது தவிர வயதானவர்களுக்கு கால் மற்றும் மூட்டு வலியைத் தீர்க்க கூடிய நீலகிரி தைலத்தை இங்கு குறைந்த விலையில் வாங்கலாம். நீலகிரி தைலம் உதகையில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும்.

மழைக்காலங்களில் பயன்படுத்தக்கூடிய ஸ்வெட்டர், ஜெர்க்கின், மழை கோட்டு போன்றவற்றை குறைந்த விலையில் உதகையில் வாங்கலாம். பல்வேறு வகையான பூக்களின் நாற்றுக்கள், ரோஜா செடிகள், பூ விதைகள் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் இங்கு வாங்கலாம்.

விதைகள், நாற்றுகள் ஆகியவை உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்காக்களில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அது தவிர தனியார் நர்சரிகளிலும் வாங்க முடியும். பூக்கள் மற்றும் பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஜாம் வகைகள், பழரசங்கள், உறுகாய் போன்றவையும் இந்த பூங்காக்களில் குறைந்த விலையில் வாங்க முடியும்.

SCROLL FOR NEXT