நாகர்கோவில்: கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் சுற்றுலா தலமான உதகைசெல்வோருக்கு நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து ரூ.444 கட்டணத்தில் நாளை முதல் புதன்கிழமை தோறும் இயக்கப்படுகிறது.
இதற்கு மார்த்தாண்டம் மற்றும் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையங்களில் முன்பதிவு செய்யப்படும். மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் இருந்துமாலை 6 மணிக்கு பேருந்து புறப்படும்.
வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும். ஊட்டியை சுற்றியுள்ள சுற்றுலா இடங்களுக்கு ரூ.100 கட்டணத்தில் செல்ல, நாகர்கோவிலில் இருந்து செல்லும் பேருந்துக்கு இணைப்பு பேருந்துகள் ஊட்டியில் இருந்து இயக்கப்படும்.
தண்டர் வேல்டு, தொட்ட பெட்டா சிகரம், ரோஜா பூங்கா மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு இப்பேருந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.