சுற்றுலா

மாமல்லபுரத்தில் இன்று புராதன சின்னங்களை இலவசமாக பார்க்கலாம்

செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: உலக பாரம்பரிய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜுனன் தபசு, கிருஷ்ண மண்டபம் மற்றும் வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகள் எவ்வித நுழைவு கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம்.

மேலும், உலக பாரம்பரிய தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT