மிதக்கும் உணவக கப்பல் | மாதிரி படம் 
சுற்றுலா

சென்னை அருகே ரூ.5 கோடியில் 2 அடுக்கு மிதக்கும் உணவகக் கப்பல் - முழு விவரம்

கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான மிதக்கும் உணவகக் கப்பல் அமைக்கும் பணியை தமிழக சுற்றுலாத் துறை மேற்கொள்ள உள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்தப் படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவைப் படகுகள், இயந்திரப் படகுகள், வேகமான இயந்திரப் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இடத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தர வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் தொடங்கப்பட உள்ளது.

இத்திட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொதுப் பங்களிப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தப் பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இதன் முக்கிய அம்சங்கள்:

  • தமிழகத்தின் முதல் மிதவை உணவக கப்பல் (Floating Restaurant) இதுவாகும்.
  • இரண்டு அடுக்குகளுடன் இந்த உணவக பயணக் கப்பல் அமைக்கப்படும்.
  • நீளம் 125 அடியும், அகலம் 25 அடியும் கொண்டதாக இது உருவாக்கப்பட உள்ளது.
  • உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.
  • முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை அமைக்கப்பட உள்ளது.
  • கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.
SCROLL FOR NEXT