கொடைக்கானல்: கொடைக்கானல் வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் காட்டுத் தீ ஏற்படுகிறது.
கொடைக்கானல் சிட்டிவியூ பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத் துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதல் வட்டக்கானல் பகுதியில் உள்ள டால்பின் நோஸ் பகுதியில் காட்டுத் தீ பரவியது. வனத் துறையினருடன் மக்கள் இணைந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீயால் வட்டக்கானல் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அப்பகுதியில் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் டால்பின் நோஸ் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.