படம்: எம்.சாம்ராஜ்

சுற்றுலா

புதுச்சேரியில் கவனம் ஈர்த்த ரஷ்ய தம்பதி - 45 நாட்கள்... ரிலாக்ஸா ஒரு பயணம்!

செய்திப்பிரிவு

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த எரிக் - சானியா தம்பதியினர் புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஆரோவில்லுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

அவர்கள், ரிக்‌ஷா வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்து, அவர்களின் பயணத்துக்கு தகுந்தாற் போல், மேற்கூரை அமைத்து சில மாற்றங்களுடன் வடிமைத்துள்ளனர். அதில் அவர்கள் கடந்த இரு நாட்களாக புதுச்சேரியை சுற்றி வருகின்றனர்.

“வெயிலின் தாக்கத்தால் புதுச்சேரியில் வெப்ப அலை அதிகமாக இருக்கிறது. நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

கார் அல்லது மற்ற வாகனங்களில் செல்வது மிகச் சிரமமாக உள்ளது. இப்படி சைக்கிள் ரிக்‌ஷாவில் செல்வது மிக நன்றாக இருக்கிறது” என்று கூறி புதுச்சேரி கடற்கரை மற்றும் ஒயிட் டவுண் பகுதிகளில் குடும்ப சகிதமாக வலம் வந்தனர்.

இவர்கள் புதுச்சேரி மற்றும் ஆரோவில் பகுதியில் 45 நாட்களுக்கு தங்கியிருக்க முடிவு செய்து, சுற்றுலா வந்துள்ளனர்.

SCROLL FOR NEXT