கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலம் 
சுற்றுலா

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் ஏப்.15 முதல் 5 நாட்கள் சுற்றுலா பயணிகளுக்கு தடை

எல்.மோகன்

நாகர்கோவில்: ஆய்வுப் பணி காரணமாக வரும் ஏப்.15ம் தேதி முதல் ஏப்.19ம் தேதி வரை, கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டப பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தை காண நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பால கட்டுமானத்தின் பராமரிப்பு பணியை மத்திய பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ், அண்ணா பல்கலைக்கழகம் போன்றவை வருகிற 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 நாட்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது.

இந்த ஆய்வு நடைபெறும் 5 நாட்களும் கண்ணாடி பாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்க படமாட்டார்கள். எனவே கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இதை கருத்தில் கொண்டு தங்களுடைய பயணத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கேட்டுகொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT