சுற்றுலா

தண்டவாளத்தில் பாறை விழுந்ததால் உதகை மலை ரயில் சேவை ரத்து! 

ஆர்.டி.சிவசங்கர்

உதகை: மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே கல்லாறு பகுதியில் தண்டவாளத்தில் பாறை விழுந்ததால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி பகுதிகளில் கன மழை பெய்தது. பர்லியாறு பகுதியில் பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதையில் கல்லாறு பகுதியில் தண்டவாளத்தில் ராட்சத பாறை விழுந்தது.

ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் பாறை விழுந்ததை கண்டு தகவல் அளித்தனர். மலை ரயில் இயக்க முடியாததால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. கோபாறையை அகற்றி தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மழையளவு: காலை 8 மணி வரையில் பதிவான மழையளவு (மி.மீ): உதகை 32, குன்னூர் 55, குந்தா 58, கோத்தகிரி 45, பர்லியாறு 43.

SCROLL FOR NEXT