உதகை அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புதிய வரவான டாப்ஃபோடில் மலர்கள். படம்: ஆர்.டி.சிவசங்கர் 
சுற்றுலா

உதகை தாவரவியல் பூங்காவில் கண்ணை கவரும் டாப்ஃபோடில் மலர்கள்

செய்திப்பிரிவு

உதகை தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில், புதிய வரவான டாப்ஃபோடில் மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவுக்கு கோடை சீசன் நாட்களில் பல லட்சம் பேர் வரும் நிலையில், வார விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக உயர்ந்து வருகிறது. நடப்பாண்டு மே மாதம் கோடை சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதற்காக, பல வண்ணங்களில், பல்வேறு வகையில் 5 லட்சம் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில், புதிய வரவான டாப்ஃபோடில் என்ற மலர்கள், தொட்டிகளில் அலங்கரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து செல்கின்றனர்.

பெரும்பாலான சுற்றுலா பயணிகள், அலங்கார தொட்டிகளின் நடுவே நின்று 'செல்ஃபி' எடுத்து மகிழ்கின்றனர்.

SCROLL FOR NEXT