சென்னை: சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் வாட்ஸ்-அப்பில் நுழைவுச் சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிண்டி சிறுவர் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "கிண்டி சிறுவர் பூங்காவில் பொங்கல் பண்டிகை விடுமுறையின்போது அதிக அளவில் கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தை நிர்வகிக்கவும், பார்வையாளர்களுக்கு அதிக வசதிகளை அளிக்கவும் வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் வழங்கும் வசதியை பூங்கா நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி 8667609954 என்ற எண்ணுக்கு 'Hi' என தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும்.
அதன் மூலம் பார்வையாளர்கள், தேவையான விவரங்களை பதிவேற்றலாம். அதனைத் தொடர்ந்து தங்களின் ஸ்மார்ட் கைபேசி மூலமாக நேரடியாக தங்கள் நுழைவு சீட்டுகளை பதிவிறக்கலாம். இந்த முயற்சியால், பார்வையாளர்களுக்கு தொந்தரவு இல்லாத அனுபவத்தை உறுதி செய்கிறது. டிக்கெட் கவுன்ட்டர்களில் காத்திருக்கும் நேரத்தை குறைக்கிறது" இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.