சுற்றுலா

இரவில் லேசர் வெளிச்சத்தில் வண்ணமயமாக ஒளிரும் திருவள்ளுவர் சிலை!

எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை இரவு நேரத்தில் லேசர் வெளிச்சத்தில் வண்ணமயமாக ஜொலித்து வருகிறது. திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடு கன்னியாகுமரியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி கூண்டு பாலத்தை வருகிற 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்துக்காக கன்னியாகுமரி களைகட்டியுள்ள நிலையில், கடல் நடுவே திருவள்ளுவர் சிலை இரவு நேரத்தில் ஒளிரும் வகையில் லேசர் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. லேசர் ஒளி வெள்ளத்தில் திருவள்ளுவர் சிலை இரவில் வண்ணமயமாக ஜொலித்தது.

பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு, ஊதா என பல வண்ணங்களில் மிளிர்ந்தது. சிலை முழுவதும் மாறி மாறி ஒரே நிறத்திலும், ஒரே நேரத்தில் சிலையில் பல வண்ணங்களும் வரும் வகையில் லேசர் ஒளி அமைக்கப்பட்டிருந்தது. இதை கரையில் நின்ற சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.

SCROLL FOR NEXT