உதகை அருகேயுள்ள கல்லட்டி ஏக்குணி மலைச் சரிவில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.படம்:ஆர்.டி.சிவசங்கர் 
சுற்றுலா

உதகை மலை சரிவில் பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி

செய்திப்பிரிவு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகளில் தற்போது குறிஞ்சி மலர் சீசன் தொடங்கி உள்ளது. உதகை அருகேயுள்ள எப்பநாடு, பிக்கபத்தி மந்து, கல்லட்டி ஏக்குணி மலைச்சரிவு, கோத்தகிரி அருகே மார்வலா எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.

சில இடங்களில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர்களும், சில இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் ‘ஸ்டாபிலாந்தஸ் குதியானஸ்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட தனித்துவம் வாய்ந்த குறிஞ்சி மலர்களும் பூத்துள்ளன.

பார்வையிட அனுமதி இல்லை: இவை காப்புக் காடுகளில் மலர்ந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிஇல்லை.

SCROLL FOR NEXT