தொடர் கனமழையால் கும்பக்கரை அருவியில் கொட்டிய வெள்ளம். 
சுற்றுலா

கும்பக்கரை அருவியில் வெள்ளம்: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

செய்திப்பிரிவு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடி வாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக் கானலில் வட்டக்கானல், வெள்ள கெவி உள்ளிட்ட பகுதி களில் பெய்யும் மழை நீரானது, இங்கு அருவியாக கொட்டுகிறது. கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால், அருவி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், கடந்த 9-ம் தேதி பெய்த கனமழை யால் அருவிக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில், அடுத்தடுத்து கன மழை பெய்ததால், அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

SCROLL FOR NEXT