கோப்புப் படம் 
சுற்றுலா

கொடைக்கானலில் மே 17-ம் தேதி கோடை விழா தொடக்கம்

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 61-வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. முதன்முறையாக பிரையன்ட் பூங்காவில் 10 நாட்கள் மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி கூறியதாவது: கொடைக்கானலில் 61-வது மலர்க் கண்காட்சி மற்றும்கோடை விழா வரும் 17-ம் தேதிதொடங்குகிறது. கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் நடைபெறஉள்ள மலர்க் கண்காட்சி, வரும் 26-ம் தேதிவரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

சுற்றுலாத் துறை சார்பில் நடைபெறும் கோடை விழாவின்போது, 10 நாட்களிலும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி, நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

இவ்வாறு ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT