உதகையில் உள்ள கர்நாடகா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர் அருவியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள். படம்: ஆர்.டி.சிவசங்கர். 
சுற்றுலா

உதகை கர்நாடகா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர் அருவி

செய்திப்பிரிவு

உதகை: உதகையில் உள்ள கர்நாடகா மாநில பூங்காவில் 15 ஆயிரம் மலர் தொட்டிகளால் உருவாக்கப்பட்ட மலர் அருவி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் உதகையில் கர்நாடக மாநில தோட்டக் கலைத் துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவில், 30 ஏக்கர் பரப்பில், பல்வேறு வகையான மலர்ச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது, கேலா லில்லி, ஜெர்மனியம், ரெட் ஹாட் போகர், பிகோனியா உட்பட பல வண்ண மலர்ச் செடிகள் பூத்து குலுங்குகின்றன. குறிப்பாக, பல்வேறு வகைகளில் வெளி நாட்டு மலர்களைக் கொண்டு, ‘மலர் அருவி' அமைக்கப்பட்டுள்ளது.

15 ஆயிரம் மலர்த் தொட்டிகளால் இந்த மலர் அருவி உருவாக்கப்பட்டு, தற்போது வண்ணமயமாக பூக்கள் பூத்துள்ளன. அதிகளவில் பூக்கள் பூத்துள்ளது பார்வையாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் அருகே, சுற்றுலா பயணிகள் நின்று ‘செல்ஃபி' எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

SCROLL FOR NEXT