சுற்றுலா

கொடைக்கானலில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா இடங்களை முன்கூட்டியே திறக்க வனத்துறை ஏற்பாடு

செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் ஃபாரஸ்ட், குணா குகை ஆகியவை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

இங்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப் படுகின்றனர். கோடை சீசனை முன்னிட்டு கொடைக்கானலில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் வனத்துறை சுற்றுலா இடங்களை முன் கூட்டியே திறக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, நேற்று ( ஏப். 17 ) முதல் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக காலை 8 மணிக்கு வனத்துறை சுற்றுலா இடங்கள் திறக்கப்படுகிறது. வழக்கம் போல் மாலை 5 மணிக்கு மூடப்படும். கோல்ஃப் மைதானத்துக்கு அருகில் உள்ள நுழைவு வாயில் மாலை 6 மணிக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த நடைமுறை ஜூன் 15-ம் தேதி வரை தொடரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT