சுற்றுலா

வண்டலூர் பூங்காவுக்கு நாளை மறுநாள் விடுமுறை

செய்திப்பிரிவு

சென்னை: மக்களவை தேர்தலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த வண்டலூரில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 180 வகைகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. விடுமுறை நாட்கள் மட்டுமின்றி வார நாட்களிலும் கூட ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர்.

இதையொட்டி பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் பூங்காவுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்.19-ம்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை மறுநாள் செயல்படாது என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நாளில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. பொதுமக்கள் வாக்கு செலுத்தும் தங்களது கடமையை தடையின்றி ஆற்றுவதை உறுதிசெய்யும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாக பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT