உதகை தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள தூலிப் மலர்கள். 
சுற்றுலா

உதகை தாவரவியல் பூங்காவில் தூலிப் மலர் அலங்காரம்

செய்திப்பிரிவு

உதகை: ஆண்டுதோறும் கோடை சீசனில் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. வெளிநாட்டு வகை மலர்களும் இதில் பயன்படுத்தப்படும்.

கடந்த காலங்களில் ஹாலந்து நாட்டில் இருந்து தூலிப் மலர்கள் கொண்டு வரப்பட்டு, காட்சி மாடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டன.

இந்நிலையில், முதல்முறையாக கடந்த ஆண்டு தூலிப் மலர்நாற்றுக்கள் கொண்டு வரப்பட்டு, சோதனை முயற்சியாக தாவரவியல் பூங்கா நர்சரியில் நடவு செய்யப்பட்டன. இவற்றை மிகவும் பாதுகாப்புடன் பூங்கா ஊழியர்கள் பராமரித்து வந்தனர். இந்த செடிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்தன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.

சோதனை முயற்சி வெற்றியடைந்ததை தொடர்ந்து, இந்த முறையும் தாவரவியல் பூங்காவில் தூலிப் மலர்கள் நடவு செய்யப்பட்டன. இம்முறை 250 தொட்டிகளில் இந்த நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. தற்போது சில தொட்டிகளில் ஊதா மற்றும் மஞ்சள் நிறத்தில் தூலிப் மலர்கள் பூத்துள்ளன. இவை கண்ணாடி மாளிகையில் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த தூலிப் மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். அனைத்துசெடிகளிலும் மலர்கள் பூத்தவுடன், அவை சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக கண்ணாடி மாளிகையில் வைக்கப்படும் என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT