சுற்றுலா

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

செய்திப்பிரிவு

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் அமைந் துள்ளது கும்பக்கரை அருவி. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் வெள்ளகவி, வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் இங்கு அருவியாக கொட்டுகிறது.

கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுற்றுலா பயணி கள் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனச்சரக அதிகாரி டேவிட் ராஜ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT