கூடலூர் அருகே நாடுகாணியில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள ஜீன்பூல் சூழல் சுற்றுலா மையம். 
சுற்றுலா

நிபா வைரஸ் பரவல் தாக்கம் குறைந்ததால் ஜீன்பூல் சூழல் சுற்றுலா மையம் திறப்பு

செய்திப்பிரிவு

கூடலூர்: நிபா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, கூடலூர் அருகே மூடப்பட்டிருந்த ஜீன்பூல் சூழல் சுற்றுலா மையத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட வனத்துறை மீண்டும் திறந்துள்ளது.

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருவதையடுத்து, தமிழக - கேரள எல்லையான நீலகிரி மாவட்டத்தில் கூடலூரை ஒட்டியுள்ள பகுதிகளில் 7 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, கேரளத்தில் இருந்து தமிழகத்துக்குள் வருபவர்கள் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், நிபா வைரஸ் பரவலால், கேரள மாநில எல்லையிலுள்ள கூடலூர் வனக்கோட்டம் நாடுகாணி வனச் சரகத்தில் இயங்கும் ஜீன்பூல் சூழல் சுற்றுலா மையம், கடந்த சில நாட்களாக தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த மையத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் உட்பட பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், தற்போது கேரளாவில் நிபா வைரஸ் பரவாததால், ஜீன்பூல் சூழல் சுற்றுலா மையம் நேற்று காலை முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

SCROLL FOR NEXT