சுற்றுலா

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜூன் 11 வரை பிக் ஃபர்னிச்சர் எக்ஸ்போ

செய்திப்பிரிவு

சென்னை: நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் `பிக் ஃபர்னிச்சர் எக்ஸ்போ' நடைபெற்று வருகிறது. இங்கு வீடு மற்றும் அலுவலகங்களுக்குத் தேவையான நவீன ஃபர்னிச்சர்களை குறைந்த விலையில் வாங்க முடியும்.

வாடிக்கையாளர்கள் வீட்டை மேம்படுத்துவதற்கு இந்த எக்ஸ்போ உதவியாக இருக்கும். புதிதாக வீடு வாங்குபவராக இருந்தாலும் வீட்டைப் புதுப்பிக்க விரும்பினாலும் இந்தகண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள நவீன வடிவமைப்புடன் கூடியகலெக்‌ஷன் ஃபர்னிச்சர்களை வாங்கி வீடுகளை அலங்கரிக்கலாம்.

ரசனையும் விருப்பங்களும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஒவ்வொருவரின் வீடும் அவரது நேர்த்தியான தேர்வைப் பிரதிபலிக்கிறது; ஆளுமையை எடுத்துக்காட்டுகிறது.

எனவே இந்த ஃபர்னிச்சர் கண்காட்சியில் ஒவ்வொருவரின் ரசனைக்கு ஏற்ப தேர்வு செய்ய ஏராளமான ரகங்கள் உள்ளன. இவை வாடிக்கையாளர் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையிலும், சிறப்புச் சலுகைகளுடனும் கிடைக்கின்றன.

இந்த எக்ஸ்போவில் பல்வேறு பிராண்டுகளில் சோபா செட், டைனிங் டேபிள், படுக்கையறை பொருட்கள், அலுவலக ஃபர்னிச்சர்கள், டேபிள், மேஜைகள் பல வடிவங்களில் நாற்காலிகள், சாய்வு நாற்காலிகள், கார்பெட், மெத்தை, உள் அலங்கார பொருட்கள், படுக்கைவிரிப்புகள், சுவர் ஓவியங்கள், கலைப்பொருட்கள் ஆகியவை கிடைக்கின்றன.

வரும் ஜூன் 11-ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்குத் தவறாமல் அனைவரும் வந்து தேவையானவற்றை வாங்கி பயன்பெறலாம்.

SCROLL FOR NEXT