சுற்றுலா

முதன்முறையாக ஜூன் 9-ம் தேதி காவல் அருங்காட்சியகத்தில் உணவு திருவிழா

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில் வரும் 9-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு உணவு திருவிழாநடைபெற உள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை காவல் தலைமையிட இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி மேற்பார்வையில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில் வரும் 9-ம் தேதி உணவு திருவிழாநடைபெற உள்ளது. இதில், புகழ்பெற்ற சமையல் கலை நிபுணர் தாமு சிறப்பு விருந்தினராக வருகை தர உள்ளார்.

இந்த உணவு திருவிழாவில் நமது பாரம்பரியம் மற்றும் உணவுகலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் தமிழ்நாடு, கேரளா,ஆந்திரா, பெங்காலி மற்றும் வடமாநில உணவு வகைகளும் இடம்பெற உள்ளது. அருங்காட்சியகத்தை கண்டுகளிக்கவும், உணவு திருவிழாவில் உண்டு மகிழவும் அனைத்து பொது மக்களுக்கும் அனுமதி உண்டு. இவ்வாறு செய்திக்குறிப்பில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT