சென்னை: வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை செம்மொழி பூங்காவில் இன்றுமுதல் 5-ம் தேதி வரை 3 நாட்கள் மலர்க்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கிவைக்கிறார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இம்மலர்க் காட்சியை பார்வையிட விரும்புவோர் tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் நுழைவுச்சீட்டு பெற வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, கூட்டநெரிசலைத் தவிர்க்க, இணைய தளத்தின் வாயிலாக முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.