தொழில்நுட்பம்

Vivo Y51 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ ஒய்51 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

          

அந்த வகையில் இப்போது இந்தியாவில் ஒய்51 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘ஒய்’ வரிசை போன்களுக்கு இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. மிட் செக்மென்ட் விலையில் இந்த போன் வெளிவந்துள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.

விவோ ஒய்51 புரோ ஸ்மார்ட்போன்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>6.75 இன்ச் டிஸ்ப்ளே

>மீடியாடெக் டிமான்சிட்டி 7360 சிப்செட்

>ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

>50 மெகா பிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா

>8 மெகா பிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

>8 ஜிபி ரேம்

>128 / 256 ஜிபி ஸ்டோரேஜ்

>7200mAh பேட்டரி

>44 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு

>5ஜி நெட்வொர்க்

>யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>இந்த போனின் விலை ரூ.24,999 முதல் தொடங்குகிறது

SCROLL FOR NEXT