சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y31t போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இப்போது விவோ Y31t போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் Y சீரிஸ் பிரிவில் வெளிவந்துள்ளது. இது மிட் ரேஞ் பிரிவில் அடங்கும்.
விவோ Y31t ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>> 6.75 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
>> ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 2 சிப்செட்
>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
>> 4, 6 ஜிபி ரேம்
>> 128, 256 ஜிபி ஸ்டோரேஜ்
>> 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
>> 50 + 2 மெகாபிக்சல் என பின்புறம் இரண்டு கேமரா உள்ளது
>> மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
>> 7,200 mAh பேட்டரி
>> 44 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> 5ஜி நெட்வொர்க்
>> இந்த போனின் விலை ரூ.25,999 முதல் தொடங்குகிறது