தொழில்நுட்பம்

Vivo Y11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ ஒய்11 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

          

அந்த வகையில் இப்போது இந்தியாவில் விவோ ஒய்11 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘ஒய்’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள 5ஜி நெட்வொர்க் போனாக அமைந்துள்ளது. இந்த போனுடன் விவோ ஒய்21 ஸ்மார்ட்போனும் சந்தையில் அறிமுகமாகி உள்ளது.

விவோ ஒய்11 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.74 இன்ச் டிஸ்பிளே

  • மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட்

  • ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

  • 4ஜிபி ரேம்

  • 64, 128ஜிபி ஸ்டோரேஜ்

  • 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள பிரதான கேமரா

  • 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

  • 6500mAh பேட்டரி

  • 45 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • சன்ரைஸ் கோல்டு, மிட்நைட் ப்ளூ என இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

  • இதன் விலை ரூ.14,999 முதல் தொடங்குகிறது

SCROLL FOR NEXT