தொழில்நுட்பம்

Vivo T5x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி5எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இப்போது இந்தியாவில் டி5எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘T’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ல் டி1 மாடல் அறிமுகமானது. அதைத்தொடர்ந்து டி2, டி3 மற்றும் டி4 மாடல் போன்கள் அறிமுகமாகின. இந்த சூழலில் தற்போது டி5எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது.

விவோ டி5எக்ஸ் ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள்

  • 6.76 இன்ச் ஃபுல் ஹெச்டி+ எல்சிடி டிஸ்பிளே

  • மீடியாடெக் டிரான்சிட்டி 7400 சிப்செட்

  • ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா

  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

  • ஏஐ சர்ச், ஏஐ கேப்ஷன்ஸ் உள்ளிட்ட அம்சங்கள்

  • 6ஜிபி / 8ஜிபி ரேம்

  • 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்

  • 7,200 mAh பேட்டரி

  • 44 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

  • இந்த போனுடன் சார்ஜர் வழங்குகிறது விவோ

  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட் 2.0

  • 5ஜி நெட்வொர்க்

  • ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்

  • இந்த போனின் விலை ரூ.18,999 முதல் தொடங்குகிறது

  • மார்ச் 24 முதல் இந்த போனின் விற்பனை தொடங்குகிறது

          
SCROLL FOR NEXT