தொழில்நுட்பம்

Vivo S2 FE ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ எஸ்2 FE போன் உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதோடு விவோ எக்ஸ் ஃபோல்ட், வி80 உள்ளிட்ட போன்களும் வெளிவந்துள்ளது.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இப்போது விவோ எஸ்2 FE போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் ப்ரீமியம் செக்மென்டில் வெளிவந்துள்ளது. வரும் 20-ம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் ‘எஸ்2’ போனை விவோ அறிமுகம் செய்திருந்த நிலையில் இப்போது எஸ்2 FE போன் அறிமுகமாகி உள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.

விவோ எஸ்2 FE போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> 6.83 இன்ச் AMOLED டிஸ்பிளே

>> மீடியாடெக் டிமான்சிட்டி 7300e சிப்செட்

>> ஆண்ட்ராய்ட் 16 இயங்குதளம்

>> 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம்

>> 128ஜிபி ஸ்டோரேஜ்

>> 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கம் உள்ள பிரதான கேமரா

>> 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

>> 10,000mAh பேட்டரி

>> 44 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு

>> ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> இந்த போனின் விலை ரூ.38,999 முதல் தொடங்குகிறது

SCROLL FOR NEXT