சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ ஸ்பார்க் 50 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்த நிறுவனத்தின் புது வரவாக ‘டெக்னோ ஸ்பார்க் 50’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.
நான்கு வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த போன் வரும் ஏப்.3-ம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு வருகிறது. ஏஐ அம்சங்கள், பெரிய திறன் கொண்ட பேட்டரி இந்த போனில் இடம்பெற்றுள்ளது. இரண்டு விதமான ரேம் வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. இந்த போனின் டிராப் ரெசிஸ்டன்ஸ் கவனம் பெறுகிறது. 1.5 மீட்டர் உயரத்தில் இருந்து இந்த போன் டிராப்பிங் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக டெக்னோ தெரிவித்துள்ளது.
டெக்னோ ஸ்பார்க் 50 சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
6.78 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
மீடியாடெக் டிரான்சிட்டி 6400 சிப்செட்
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
4, 6 ஜிபி ரேம்
128 ஜிபி ஸ்டோரேஜ்
50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
6,400mAh பேட்டரி
45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
5ஜி நெட்வொர்க்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
இந்த போனின் விலை ரூ.16,999 முதல் தொடங்குகிறது