தொழில்நுட்பம்

Tecno POVA Curve 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ POVA கர்வ் 2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்த நிறுவனத்தின் புது வரவாக ‘டெக்னோ POVA கர்வ் 2’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

          

இப்போது சந்தையில் அறிமுகமாகும் போன்களின் பேட்டரி கவனம் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இந்த போனில் 8,000 mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது. இரண்டு விதமான ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. வரும் 20-ம் தேதி இந்த போன் சந்தையில் அறிமுகமாகிறது. இந்த போனுக்கு குறிப்பிட்ட வங்கிகளில் அறிமுகம் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெக்னோ POVA கர்வ் 2 ஸ்மார்ட்போன்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே

  • மீடியாடெக் டிமான்சிட்டி 7100 சிப்செட்

  • ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

  • பின்பக்கத்தில் 50 + 2 மெகாபிக்சல் என இரண்டு கேமரா உள்ளது

  • 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

  • 8,000 mAh பேட்டரி

  • 45 வாட்ஸ் திறன் கொண்டுள்ளது சார்ஜிங் ஸ்பீடு

  • ரிவர்ஸ் சார்ஜிங் அம்சமும் இதில் உள்ளது

  • 8ஜிபி ரேம்

  • 128 / 256ஜிபி ஸ்டோரேஜ்

  • இந்த போனின் விலை ரூ.27,999 முதல் தொடங்குகிறது

  • மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

  • 5ஜி நெட்வொர்க்

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

SCROLL FOR NEXT