சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ போவா 8 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் இந்நிறுவனம் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்த நிறுவனத்தின் புது வரவாக ‘டெக்னோ போவா 8 புரோ’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.
இந்த போனின் ஹைலைட்டாக அதன் பின்பக்கத்தில் உள்ள கேமராவுக்கு அருகே உள்ள மேட்ரிக்ஸ் டிஸ்பிளே தான் என சொல்லப்படுகிறது. சுமார் 177 மினி எல்இடி-கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நோட்டிபிகேஷன்களுக்கு உதவும் என தகவல்.
டெக்னோ போவா 8 புரோ ஸ்மார்ட்போன்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>> 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே
>> மீடியாடெக் டிமான்சிட்டி 7400 அல்டிமெட் சிப்செட்
>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
>> 8, 12 ஜிபி ரேம்
>> 256, 512 ஜிபி ஸ்டோரேஜ்
>> 50 + 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள கேமரா
>> 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
>> 6,500mAh பேட்டரி
>> 45 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
>> ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
>> 5ஜி நெட்வொர்க்
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
>> இந்த போனின் விலை ரூ.49,999 முதல் தொடங்குகிறது
>> வரும் 21-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை இந்தியாவில் தொடங்குகிறது