ரெட்மி 15ஏ ஸ்மார்ட்போன்

 
தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் Redmi 15A ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி 15ஏ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம்தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.

          

இந்நிலையில், ரெட்மி 15 சீரிஸ் போன்களில் ரெட்மி 15ஏ மாடல் போன் அறிமுகமாகி உள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. இந்த போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதன் பேட்டரி சக்தியை கொண்டு இரண்டு நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என ரெட்மி தெரிவித்துள்ளது. பிரீமியம் விலை போன்களை போல நான்கு ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் கிடைக்கும் என ரெட்மி தெரிவித்துள்ளது. ஏஐ அம்சங்களும் இந்த போனில் இடம்பெற்றுள்ளது.

ரெட்மி 15ஏ சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.90 இன்ச் எல்சிடி டிஸ்பிளே

  • ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

  • Unisoc T8300 சிப்செட்

  • 4, 6ஜிபி ரேம்

  • 64, 128ஜிபி ஸ்டோரேஜ்

  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா

  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

  • 6300mAh பேட்டரி

  • 15 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

  • ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்

  • 5ஜி நெட்வொர்க்

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • இந்த போனின் விலை ரூ.12,999 முதல் தொடங்குகிறது

SCROLL FOR NEXT