தொழில்நுட்பம்

Realme P4 Lite ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி பி4 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம்.

          

இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது ரியல்மி பி4 லைட் ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

ரியல்மி பி4 லைட்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.74 இன்ச் எல்சிடி டிஸ்பிளே

  • Unisoc T7250 சிப்செட்

  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்

  • 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா

  • 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

  • 6300mAh பேட்டரி

  • 15 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • 4ஜி நெட்வொர்க்

  • 4ஜிபி ரேம்

  • 64 / 128ஜிபி ஸ்டோரேஜ்

  • மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

  • இதன் விலை ரூ.9,999 முதல் தொடங்குகிறது

SCROLL FOR NEXT