சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ எக்ஸ்8 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தை தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வரும் போக்கோ, பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் தற்போது போக்கோ எக்ஸ்8 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. இது ‘எக்ஸ்’ சீரிஸில் வெளிவந்துள்ள போனாக அமைந்துள்ளது. இந்த போன் பிரீமியம் மிட்-செக்மென்ட் விலையில் வெளியாகியுள்ளது. இதோடு போக்கோ எக்ஸ்8 பவர் ஸ்மார்ட்போனும் வெளியாகி உள்ளது.
போக்கோ எக்ஸ்8 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>> 6.83 இன்ச் AMOLED டிஸ்பிளே
>> ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜெனரேஷன் 4 சிப்செட்
>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
>> 50 + 2 மெகாபிக்சல் என பின்புறம் இரண்டு கேமரா உள்ளது
>> 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
>> இந்தியாவில் 9,000mAh பேட்டரி உடன் இந்த போன் வெளிவந்துள்ளது
>> 6, 8 ஜிபி ரேம்
>> 128, 256 ஜிபி ஸ்டோரேஜ்
>> மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
>> 67 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
>> ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
>> 5ஜி நெட்வொர்க்
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> இதன் விலை ரூ.29,999 முதல் தொடங்குகிறது