சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ எம்8எக்ஸ் போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தை தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வரும் போக்கோ, பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் தற்போது போக்கோ எம்8எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. இது ‘எம்’ சீரிஸில் வெளிவந்துள்ள மற்றுமொரு போனாக அமைந்துள்ளது. இந்த போன் மிட்-செக்மென்ட் விலையில் வெளியாகியுள்ளது. இதன் பேட்டரி மற்றும் டிஸ்பிளே உள்ளிட்டவை ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
போக்கோ எம்8எக்ஸ் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>> 6.9 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
>> ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 5 சிப்செட்
>> 4, 6 ஜிபி ரேம்
>> 128 ஜிபி ஸ்டோரேஜ்
>> 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள கேமரா
>> 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
>> 7,900 mAh பேட்டரி
>> 45 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் இந்த போனுடன் கிடைக்கிறது
>> 22.5 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்டும் இதில் உள்ளது
>> 5ஜி நெட்வொர்க்
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> இந்த போன் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது
>> இதன் விலை ரூ.20,999 முதல் தொடங்குகிறது