சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பிலிப்ஸ் எஸ்7221 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் உலக அளவில் கவனம் பெற்ற நிறுவனம் பிலிப்ஸ். இப்போது மீண்டும் ‘எஸ்722’ ஸ்மார்ட்போன் மூலம் மொபைல்போன் செக்மென்டில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளது பிலிப்ஸ். அந்நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் 5ஜி போனை இதன் மூலம் அறிமுகம் செய்துள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
இந்த போன் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரியல்மி, ஒப்போ உள்ளிட்ட நிறுவனங்களின் குறிப்பிட்ட மாடல் போன்களுக்கு போட்டியாக வெளிவந்துள்ளதாக டெக் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பிலிப்ஸ் எஸ்7221 ஸ்மார்ட்போன்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>> 6.67 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
>> Unisoc T765 சிப்செட்
>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
>> 6, 8 ஜிபி ரேம்
>> 128 ஜிபி ஸ்டோரேஜ்
>> 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
>> 64 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
>> 5,700 mAh பேட்டரி
>> 18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
>> 5ஜி நெட்வொர்க்
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> இந்த போனின் விலை ரூ.20,499 முதல் தொடங்குகிறது