சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 15சி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ‘ரெனோ 15சி’ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போவின் ‘ரெனோ 15’ சீரிஸ் வரிசையில் இந்த போன் வெளிவந்துள்ளது. இந்த போனின் பேட்டரி பேக்-அப் திறன், மெல்லிய வடிவமைப்பு, கேமரா உள்ளிட்டவை ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
ஒப்பார் ரெனோ 15சி: சிறப்பு அம்சங்கள்
6.57 இன்ச் AMOLED டிஸ்பிளே
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
ஸ்னாப்டிராகன் 6 ஜெனரேஷன் 1 சிப்செட்
பின்பக்கத்தில் 50 + 8 + 2 மெகாபிக்சல் கொண்ட மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது
50 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
இந்த போனின் முக்கிய ஹைலைட்டாக அமைந்துள்ளது பேட்டரிதான். 7,000mAh பேட்டரி இதில் உள்ளது
80 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
8ஜிபி / 12ஜிபி ரேம்
256ஜிபி ஸ்டோரேஜ்
5ஜி நெட்வொர்க் சப்போர்ட்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
இந்த போனின் விலை ரூ.34,999 முதல் தொடங்குகிறது