தொழில்நுட்பம்

Oppo Find X10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ‘Find’ சீரிஸ் வரிசையில் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 போன் இந்தியாவில் வெளிவந்துள்ளது. இந்த போன் ப்ரீமியம் ரக பிரிவில் வெளிவந்துள்ளது. இதோடு ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 புரோ மேக்ஸ், ஒப்போ Pad மினி டேப்லெட் மற்றும் என்கோ 4 இயர்பபாட் சாதனமும் வெளிவந்துள்ளது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> 6.59 இன்ச் AMOLED டிஸ்பிளே

>> மீடியாடெக் டிமான்சிட்டி 9600எம் சிப்செட்

>> ஆண்ட்ராய்டு 17 இயங்குதளம்

>> 12ஜிபி ரேம்

>> 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ்

>> 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

>> 200 + 50 + 200 மெகாபிக்சல் என மூன்று கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது

>> 8,000mAh பேட்டரி

>> மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

>> 80 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

>> வயர்லஸ் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்

>> 5ஜி நெட்வொர்க்

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> இந்த போனின் விலை ரூ.1,39,999 முதல் தொடங்குகிறது

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT