சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ F33 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ‘F’ சீரிஸ் வரிசையில் ‘F33’ போன் வெளிவந்துள்ளது. உலக அளவில் ஒப்போவின் F சீரிஸ் போன்களுக்கு சிறந்த வரவேற்பு உள்ளது. தற்போது F33 மற்றும் F33 புரோ மாடல் போன்களை ஒப்போ அறிமுகம் செய்துள்ளது. மிட் செக்மென்ட் விலையில் இந்த போன்கள் வெளிவந்துள்ளது.
ஒப்போ F33 சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
6.57 இன்ச் AMOLED டிஸ்பிளே
மீடியாடெக் டிமான்சிட்டி 6360 மேக்ஸ் சிப்செட்
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
16 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
50 + 2 மெகாபிக்சல் என இரண்டு கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
6, 8ஜிபி ரேம்
128, 256ஜிபி ஸ்டோரேஜ்
இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
7000mAh பேட்டரி
80 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
5ஜி நெட்வொர்க்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
இந்த போனின் விலை ரூ.31,999 முதல் தொடங்குகிறது