சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ஏ6சி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் இப்போது இந்தியாவில் ஏ6சி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது ஒப்போ.
இந்த போன் ‘ஏ’ சீரிஸ் வரிசையில் வெளிவந்துள்ளது. கடந்த ஜனவரியில் சீனாவிலும், கடந்த ஏப்ரலில் தாய்லாந்திலும் இந்த போன் வெளியானது. இந்நிலையில், இந்தியாவில் சர்வதேச மாடலை ஒப்போ அறிமுகம் செய்துள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
ஒப்போ ஏ6சி சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>> 6.75 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
>> Unisoc டி7250 சிப்செட்
>> ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
>> 4ஜிபி ரேம்
>> 64, 128ஜிபி ஸ்டோரேஜ்
>> 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
>> 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள பிரதான கேமரா
>> 7,000mAh பேட்டரி
>> 15 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
>> ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> இந்த போனின் விலை ரூ.13,999 முதல் தொடங்குகிறது