தொழில்நுட்பம்

OnePlus Nord CE 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

நார்ட் சீரிஸ் மூலம் பிரீமியம் மிட்-ரேஞ்ச் போன்களை ஒன்பிளஸ் நிறுவனம் சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 மற்றும் நார்ட் சிஇ 6 லைட் மாடல் போன்கள் தற்போது அறிமுகமாகி உள்ளது. கடந்த மாதம் நார்ட் 6 போன் அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே

  • ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரேஷன் 4 சிப்செட்

  • ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

  • 8ஜிபி ரேம்

  • 128, 256ஜிபி ஸ்டோரேஜ்

  • 50 + 2 மெகாபிக்சல் என பின்பக்கத்தில் இரண்டு கேமரா உள்ளது

  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

  • 8,000mAh பேட்டரி

  • 80 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு

  • ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்

  • 5ஜி நெட்வொர்க்

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

  • இந்த போனின் விலை ரூ.29,999 முதல் தொடங்குகிறது

SCROLL FOR NEXT