சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் என்6 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.
‘என்’ சீரிஸ் வரிசையில் முதல் முறையாக இந்தியாவில் போனை வெளியிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். இரண்டு வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த போன் வரும் ஜூலை 4-ம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்.
இந்த போனின் பேட்டரி மற்றும் சிப்செட் ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>> 6.8 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
>> மீடியாடெக் டிமான்சிட்டி 6360 அபேஸ் சிப்செட்
>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
>> 4, 6 ஜிபி ரேம்
>> 128 ஜிபி ஸ்டோரேஜ்
>> 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
>> 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
>> 8,000mAh பேட்டரி
>> ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
>> 45 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
>> 5ஜி நெட்வொர்க்
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> இந்த போனின் விலை ரூ.22,999 முதல் தொடங்குகிறது